Thursday, July 16, 2009

ஒரு திரில் திருமணம்…


muslim-wedding-hands

பின்சாமத்தில் ஒரு முறை ”திடுக்கிட்டு” கண் விழித்த போது, நோக்கியாவின் திரையினை பார்த்துச் சாய் சிரித்துக்கொண்டிருப்பதாக ஜோ சொன்னான். நொடிக்கு நொடிக்கு நோக்கியாவின் திரையினை பார்ப்பதும் குப்புற படுப்பதுமாக இருப்பதாகவும்.எப்போது தூங்குவான், எப்போது எழுந்திருக்கிறான் என்பது மில்லியன் டோலர் கேள்வியாக இருப்பதாகவும் சொன்னான். அலாரம் வைத்தவனாய் ஆறுமணிக்கெல்லாம் படுக்கை விரித்துவிடுவான், நித்திரை கொள்வதென்னமோ பின்சாமத்தில்தான்.

நோக்கியாவின் திரை உயிர்த்து அதன் ஒளி கீற்றுக்கள் மேற்சுவரில் தெறிக்கும் போது ’திடும்’ என எழுந்து புன்னகைத்தான். ”என்னடா மச்சி ?” என ஒரு முறை  ஜோ வினவிய போது  ”ஒரு குருவி சிக்கியிருக்கிடா” என்றான் ல்லோசன குறும் சிரிப்புடன்.சிக்கியிருக்கும் இந்த குருவி - காக்கா,கிளி போன்ற பறவைகள் என எண்னுபவர்கள், ஒரு நல்ல ஆ.கு வைத்தியரினை அனுகலாம். 

புதிதாக எங்கள் நட்புச் சதுரத்தினுள் நுளைந்த ஜோவிற்கு இது பிரமிப்பாக இருக்கலாம். சாயுடன் முன்று வருடங்களாக குடும்பம் நடத்தும் எங்களுக்கு (நான்,வினோ,சரா), காலையில் எழுந்து பல் தேய்க்காமல் கணனி முன்னால் அமர்ந்து-ஆப்பிள் யூஸ் குடித்தபடி-சட்டிங் செய்வது  போன்ற ஒரு சாதரண நிகழ்வு.

சாய்க்கும்-பொண்களிற்குமான தொடர்பு ( இதனை சாய் நட்பு என்பான்)  எவ்வளவு விரைவாக பற்றிகொள்கிறதோ, அவ்வளவு விரைவாக விட்டும் போகும். அதாவது அந்த குருவிக்கு புதிய கரும்குரங்கு(வார்த்தை உதவி வினோ) சிக்கும்வரை தொடரும்.

ஆனால் அதுவரை, கல்யானமாகி மூண்று மாதங்களோ ஆகும் ஐ.டி தம்பதியரின்(அமெரிக்கா டூ சென்னை) நெருக்கத்திலேயே இருவரும் பேசிக்கொள்வார்கள் என்பதனைவிட கொஞ்சி கொள்வார்கள் என்பதே சரியாகும்.

ஆரம்ப நாட்களில் மனைவியுடன் பேசுகிறான் என ஜோ நினைத்திருந்தான்.அவன் வந்த 3மாசங்களில் ஹாய் அனு, சொல்லுமா நித்து கோபமா ஜானு இல்லமா சுஜி என பெயர்கள் மாறியதில் ஜோவி்ற்கும் உண்மை புரிந்தது. 

இப்படி மாசம்,வாரம்,நாட்களாக கடலையும்போட்டு.. கன்றும் வளர்த்துவிட்ட சாய்க்கு நாளை திருமணம்.அந்த புண்ணியவதியை நினைதால்தான்…..

மணிகணக்காக அலை பேசியும்,சாட்டிலும் காதலித்த சாய்க்கு நிச்சயிக்கபட்ட திருமணம் அதவாது தாய், தந்தயர் பார்த்தவளை கரம்பிடிக்கிறான்.

“என்னடா மச்சி இப்படி பண்ணிடியே” என வினவினால்

“வாழ்கைல எப்பவுமே ஒரு திரில் இருக்கனும்டா'” எங்கிறான் ஆமா இதில என்னதான் திரில் இருக்கோ.

22 comments:

தேவன் மாயம் on July 16, 2009 at 2:54 AM said...

இனிமேல் அவருடைய வாழ்க்கை த்ரில்தான்!!

தேவன் மாயம் on July 16, 2009 at 2:55 AM said...

கதை தொடருமா? இல்லை அவ்வளவுதானா?

Sutha on July 16, 2009 at 4:27 AM said...

உங்க எழுத்துகள் சிறப்பா இருக்குது..
அதவிட உங்க மிக மிக நேர்த்தியாக இருக்குது.
எங்க எடுத்தது எண்டு சொன்னா நாமளும் போடுவம் தானே?

SUREஷ் (பழனியிலிருந்து) on July 16, 2009 at 4:41 AM said...

திரில்..,

திரில்...,

SUREஷ் (பழனியிலிருந்து) on July 16, 2009 at 4:42 AM said...

ஓட்டுப் போட்டாச்சு

கலையரசன் on July 16, 2009 at 7:09 AM said...

இப்ப என்னா சொல்ல வறீங்க பாஸூ?

ஆபிரகாம் on July 16, 2009 at 9:32 AM said...

@தேவன் மாயம்-ம்ம் அப்ப அப்ப தொடரலாம் என இருக்கிறேன்.
@Sutha-நன்றிங்க இங்குதாங்க எடுத்தேன்(http://btemplates.com/2008/12/26/revolution-church/)ஆனால் எனக்கு விரும்பியபடி கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறேன்.. வேனும்னா உங்களுக்கும் செய்துதரலாம்... அட்வான்ஸ்சை என் வங்கிகணக்குக்கு அனுப்பிடுங்க!

@SUREஷ் (பழனியிலிருந்து-நன்றிங்க
@கலையரசன்-இதுதான் திரில்லாம்

ஹேமா on July 16, 2009 at 10:46 AM said...

கதை இன்றைய இயல்வாழ்க்கையை சொல்லிப் போகிறது.

திருட்டு வாழ்க்கை = "த்ரில்"

சந்ரு on July 16, 2009 at 10:49 AM said...

ஆஹா அசத்திட்டிங்க...

ஆபிரகாம் on July 16, 2009 at 11:01 AM said...

@ஹேமா- ஓ திருட்டுதான் திரில்லா??
@சந்ரு - நன்றிஜி

வால்பையன் on July 16, 2009 at 4:00 PM said...

//நல்ல ஆ.கு வைத்தியரினை அனுகலாம்.//

அப்போ சிட்டு ”குருவி” லேகியம்ங்கிறது உண்மையில்லையா?

ஆபிரகாம் on July 16, 2009 at 4:39 PM said...

@இதுதான் வால் டைச்சு

பாலா on July 16, 2009 at 4:48 PM said...

ஆபிரகாம் என் வலைப்பதிவைப்பார்க்கவும்

சுசி on July 16, 2009 at 10:40 PM said...

சாயோட சரி பாதி இத படிச்சாங்கன்னா இன்னும் த்ரில்லா இருக்கும்.

//தேவன் மாயம் said...
இனிமேல் அவருடைய வாழ்க்கை த்ரில்தான்!!//
இதையும் எக்கச்சக்கமா ரிப்பீட்டிக்கிறேன்.

சங்கா on July 17, 2009 at 4:26 AM said...

நன்றாக எழுதுகிறீர்கள். உங்களை “Interesting Blog" விருதுல கோர்த்து விட்டிருக்கிறேன். (http://wimpystar.blogspot.com/2009/07/2_16.html)

பிடித்திருந்தால் தொடருங்கள்,

நன்றி!

அன்புடன்
சங்கா!

ஜெகநாதன் on July 17, 2009 at 9:04 AM said...

த்ரில் - இல்ல திகில்தான் இருக்கப் ​போவுது! அனுபவத்தில சொல்றேன்!! ​ரொம்ப சிரமம் கல்யாணத்துக்கப்புறம் கல்லா கட்டறது!!!! சாய்... ஜமாய்..!
அருமையான இடுகை!

ஆபிரகாம் on July 23, 2009 at 12:50 AM said...

பாலா-நன்றி தல!
சுகி-நன்றிங்க!
சங்கா-மிகவும் நன்றி!
நன்றி ஜெ.ந ஜி

தமிழ் பிரியன் on July 25, 2009 at 8:31 PM said...

///தேவன் மாயம் said...

இனிமேல் அவருடைய வாழ்க்கை த்ரில்தான்!!///
இனிமே அவரோட வாழ்க்கையே அம்புட்டுத்தேன்.. இபப்டிச் சொல்லனும்..;-))

தமிழ் பிரியன் on July 25, 2009 at 8:32 PM said...

வாசிக்கப்பட்ட நாளிதள்... அல்லது நாளிதழ்???

ஆபிரகாம் on July 26, 2009 at 12:02 PM said...

நன்றி தமிழ்- திருத்திவிட்டேன்

mukilan முகிலன் on August 18, 2009 at 8:00 PM said...

நன்று
வாழ்த்துகள்!
தொடர்ந்தும் எழுதுங்கள். குறுங்கதைகள் பல்வேறு தளங்களில் வெளிவர ஊக்குவிப்போம்.
-முகிலன்
தோரணம்

OURTECHNICIANS HOME BASE SERVICES on March 31, 2016 at 9:50 AM said...

ourtechnicians deals with home appliance repair and services are electrical services,plumbing services, two wheeler repair, ATS system repair ervices, house renovation,paintings, washer repair services, bathroom and kitchen remodelling and maintenance services.If you need our service inspect on
home appliance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/