Tuesday, June 16, 2009

Twenty20 யும் ஆயிரத்தில் ஒரு பசங்களும்

7 comments

ICC World Twenty20
திர் பார்த்த பரபரப்பும்,அதிரடியும் நிறையவே மிஸ்ஸிங். பெரிய மைதானங்களும், வேகப்பந்து ஆடுகளங்களும்(சுழல்பந்து வீச்சாளர்களே பிரகாசிக்கிறார்கள்)  பேட்டியின் விறுவிறுப்பினை குறைத்திருக்கினறன.ஆனாலும் மேசமில்லை. நடப்புச் சம்பியன் இந்தியாவும் நடையைகட்டிய பின்னர், எனக்கு பிடித்த இங்கிலாந்தும் பரிதாபமாக  வெளியேறியது.

மீதமிருப்பது

104849 

  • மேற்கிந்திய தீவுகள்- விஸ்வரூபம் எடுக்காவிட்டாலும் நன்றாகவே போராடுகிறார்கள்.Gayle-ஐ எதிர்பார்த்திருக்க Brovoவோ சகலதுறையிலும் அசத்துகிறார் .
  • தென் ஆபிரிக்கா- பெரிதும் எதிர்பார்கும் அணி.சம்பியன் ஆவதற்கான திறமையும்,தகுதியும் இருந்தாலும் அதிஸ்டம்தான் கைகொடுப்பதில்லை.
  • பாகிஸ்த்தான்- தட்டு தடுமாறி அரையிறுதி வாய்ப்பினை பெற்றிருக்கிறது. முக்கியமான போட்டிகளில் மூர்க்கமாக போராடுவது பாகிஸ்தானின் பலம்.
  • இலங்கை-சங்கா நன்றாகவே செயற்படுகிறார், மத்திய வரிசையில் அதிரடி மிஸ்ஸிங். ஆரம்ப துடுப்பாட்டமே பலம்.
  • நியூசிலாந்து-துடுப்பாட்டம்,பந்து வீச்சு என அத்தனையிலும் திறமையான வீரர்கள் இருந்தும் .ம்ஹும் சொல்லி கொள்ளும்படியான வெற்றிகள் எதுவுமேயில்லை-இன்றாவது சாதிப்பார்களா??

ன்று மாலை பரபரப்பான போட்டி-நியூசிலாந்திற்கு பழிக்கு பழி வாங்க ஒரு தருணம். -சங்கா தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு - காலநிலை சீராக அமைந்தால் -விறுவிறு விருந்து தயார்.

/////

பசங்க
pasanga-mar23-2009வி
கடனில் பசங்க இயக்குனரின் பேட்டி வாசித்தபோதோ,பட ஸ்டில்கள் பார்த்த போதோ அவ்வளாவாக கவரவில்லை.ஆனால் படம் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது. வண்டுகளின் நடிப்பு அபாரம்.அதிலும் பக்கடா-சூப்பர் பா.

////

ஆயிரத்தில் ஒருவன் -  
Aayirathil-Oruvan24 பாடல்கள் வித்தியாசமாகவும்,சிறப்பாகவும் வந்திருக்கிறன.ஜி.வி-யிடம் நிறையவே வேலை வாங்கியிருக்கிறார் செல்வா.பாடல்களினை கேட்டும் போது யுவானாக இருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ,என இந்த   குரங்குமனம் சிந்திக்கவே செய்கிறது.

Saturday, June 13, 2009

நாட்களினை பிரதியெடுத்தல்…

4 comments

4நாட்குறிப்புக்களிற்கும் எனக்குமான சிநேகிதம் சாரணர் இயக்கத்தில் இனைந்திருந்த பதின்ம வயது ஞபகங்களாகவே உள்ளது. கருநிலம் அப்பிய தடித்த  மட்டையுடைய  குண்டு நாட்குறிப்பு ஒன்று, என் புத்தகப்பையில் எப்போதுமே இருக்கும். அந்த நாளில்  செய்யும் நல்ல செயல், பிடித்த விடையங்களை குறித்துவைத்து, வார முடிவுகளில் வாசித்து காண்பிப்போம்.

பின் நாட்களில் அந்த பழக்கம் அரிதாகி, முற்றாகவே நின்று போனது.பழைய புத்தக அலமாரி இடுக்குகளில் எதாவது தேடும் போது எதோச்சையாக கண்ணில்படும் அந்த கருநீல நாட்குறிப்பில். தொலைந்து போன பால்யம் கண்சிமிட்டி சிரிக்கும்.முகம் மறந்த  நட்புக்களுடனான நெகிழ்சியான தருனங்கள்,கேலிகள்,பிரிவுகள் என அத்தனையும் அதில் படிந்து போயிருக்கும்.

இன்னும் பின் நாட்களில் பிடித்த கவிதை வரிகளை குறித்து வைத்திருந்தேன், குறிப்பாக கண்ணில் சிக்கும் அனைத்து காதல் கவிதகளும்  நாட்குறிப்பின் முழு தாள்களையும் நிரப்பியிருக்கும்.சில சரித்திர குறிப்புக்களும், உதாரணமாக நானும்,அபியும் சந்தித்துக் கொண்ட தினங்களையும்,பரிமாறப்பட பரிசுப் பொருட்களையும் குறித்து வைத்திருந்தேன்.  மழைகள் நின்றுபோன பின்மாலை ஒன்றில் திரும்ப படித்து காட்டலாமேனும் பேராசையில்.

ஆக்கிரமித்திருந்த காதல் மேகங்கள் கலையத் தொடங்கிய நாட்களில் கவிதைகள் நிரப்பியிருந்த நாட்குறிப்பின் பாகங்களினை நண்பர்களின் பிறந்த தினங்கள், முகவரிகள், தொலைபோசி இலக்கங்கள் நிரப்பின. இவற்றினை  குறித்துவைப்பதோடு நாட்குறிப்புகளுடனான தொடர்பு முடிந்து போனது.

அலைபேசி இரண்டம் இதயமாகி என்னுடன் பினைந்த பின்னர், நாட்குறிப்புக்கள் தேடுவாரற்று போனாது.மூலைவீட்டு எச்சுமி பாட்டியின் பிறந்த தினத்திலிருந்து கணடாவில் பிறக்கவிருக்கும் அக்கா மகனின் பிறந்த தினம் வரை சேமித்து வைக்க அருளிய முகமறியாத அலைபேசியை சிருஸ்டித்தவனை அடிக்கடி நமஸ்கரித்தேன்.

ஒரு முறை  எனது அகோர ஸ்பரிச தாக்குதல்களிலிருந்து தன்னைவிடுவிக்க-திடுமென- தனது முழு இயக்கத்தினையும் அலைபேசி நிறுத்தியது . அதனுடன் எச்சுமி பாட்டி பூவுலகில் வாழ்ந்ததற்கு இருந்த ஆதாரங்களும், இரு முறை அபி தந்த முத்தங்களின் சத்தங்களும் அழிந்து போனது.

பின்னர் அலைபேசியில் சேமிக்கும் அத்தனையும்,நாட்குறிப்பிலும் குறித்துவைக்க தவறுவதேயில்லை.

 

  •   றந்து போன நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தினை.. மீண்டும் தொடர இடமருளிய கூகுலாணந்தாவை வணங்கி, நாட்குறிப்புக்களை தொடரலாம் என நினைத்திருக்கிறேன்.  உதிர்ந்து போன பால்யங்களின் நிகழ்வுகளினை, நெகிழ்ச்சியான தருணங்களினை மீட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம்.

Thursday, June 11, 2009

எனக்கான குறிப்புக்கள்.

8 comments

148280804_cc9c1adb85

சொட்டிக்கொண்டிருக்கிறது காதல்
பினைந்திருக்கும் விரலிடுக்கிலும்
பிரியமலிருக்கும் உதடுகளிலும்.

***

வார்த்தைகளோடு காதலினையும் 
கடத்தும் தொலைபேசிகள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை
நிராகரிக்கபடும் அழைப்புகளில்
வழியும் காதலினையும்
சேர்க்கப்படாத வாழ்த்துக்களில்
தகிக்கும் வெம்மையினையும்

***

காதல் மட்டுமல்ல;
கண்களும் தான்;
உலர்ந்து விட்டிருக்கிறது.

***

நீர்ப்பரப்பிலிருந்து விடுபட்ட மீன்களாகின்றன
காதலிலிருந்து துண்டித்த இதயங்கள்.

-ஆபிரகாம்

Monday, June 8, 2009

நீட்சியான இரவுகள்.

7 comments

2767623568_1aeeb63478 

வெம்மை அப்பிய உதடுகளின்
ஈரமுத்தங்கள்;
நினைவில் வரும் மழைநாட்களில்.
நீட்சியான இரவுகளும்
சூடான  கோப்பை தேநீரும் 
சில முத்தங்களும் கிடைத்துவிடுகின்றது

வனிப்பவரின்றி பெய்யும் மழை
சுருண்டுகிடக்கும் நாய்
சுவார்சியமின்றி விரியும் இரவு
தலையனை இளம்சூட்டில் 
வழியும் காதல் என
விட்டுபோன காதலினை 
ஆக்கிரமிக்கின்றன நினைவுகள்.

  

-ஆபிரகாம்

Sunday, June 7, 2009

சுய புலம்பல் (அ) முதற்பதிவு

5 comments

tt0700663திருடப்படும் நாட்குறிப்புக்களே.. பதிவுகளாய் பிரசவிக்கின்றன எனும்,அறிமுகத்தினூடு அறிமுகமாகிய பதிவுலகம்.. புதியதொரு பொழுதுபோக்கிடமாக என்னை  வாசீகரித்திருப்பது மாத்திரமல்லாது, எனனுள் துர் சொப்பனங்களோடு துங்கிக் கொண்டிருந்த எழுத(டைப்ப)னும் எனும் அல்ப ஆசையினையும் கிளறிவிட்டிருக்கிறது- விளைவு !

  • யானும் ஒரு தமிழ் வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளேன்…

இத்தால் சகலருக்கும் அறிவிப்பது யாதேனில்..

இவை சைபர் வெளியின் மின்னனுக்களில்,எனக்கான சில பகிர்வுகள்.

-ஆபிரகாம்