Thursday, August 27, 2009

மழை நின்றுபோன இரவு

19 comments

 இருளின் மென்போர்வை தளர்த்தி 9_Rain_at_Night
அலையும் வன்மம்.
முகத்தினை  கொடூரமாக்கி
இறுதி வார்த்தைகளில் திட்டியது

அநாமதேயமாக பெய்யும் மழை 
விரல் பற்றி அழைத்துச் சென்றது
காதல் உலர்ந்த நாட்களிற்கு

தெருமுனையில் உறங்கும் குழந்தை
சன்னாமாய் ஒலி எழுப்பி
அயர்ந்து தூங்குகிறது
தாயின் நித்திரை சிதைத்து

வழிந்துபோகும் இடம் புரியாமல்
தேங்கியிருக்கிறது மழை நீர்
முறிந்த நம்காதலின் எச்சமாய்.