Saturday, June 13, 2009

நாட்களினை பிரதியெடுத்தல்…


4நாட்குறிப்புக்களிற்கும் எனக்குமான சிநேகிதம் சாரணர் இயக்கத்தில் இனைந்திருந்த பதின்ம வயது ஞபகங்களாகவே உள்ளது. கருநிலம் அப்பிய தடித்த  மட்டையுடைய  குண்டு நாட்குறிப்பு ஒன்று, என் புத்தகப்பையில் எப்போதுமே இருக்கும். அந்த நாளில்  செய்யும் நல்ல செயல், பிடித்த விடையங்களை குறித்துவைத்து, வார முடிவுகளில் வாசித்து காண்பிப்போம்.

பின் நாட்களில் அந்த பழக்கம் அரிதாகி, முற்றாகவே நின்று போனது.பழைய புத்தக அலமாரி இடுக்குகளில் எதாவது தேடும் போது எதோச்சையாக கண்ணில்படும் அந்த கருநீல நாட்குறிப்பில். தொலைந்து போன பால்யம் கண்சிமிட்டி சிரிக்கும்.முகம் மறந்த  நட்புக்களுடனான நெகிழ்சியான தருனங்கள்,கேலிகள்,பிரிவுகள் என அத்தனையும் அதில் படிந்து போயிருக்கும்.

இன்னும் பின் நாட்களில் பிடித்த கவிதை வரிகளை குறித்து வைத்திருந்தேன், குறிப்பாக கண்ணில் சிக்கும் அனைத்து காதல் கவிதகளும்  நாட்குறிப்பின் முழு தாள்களையும் நிரப்பியிருக்கும்.சில சரித்திர குறிப்புக்களும், உதாரணமாக நானும்,அபியும் சந்தித்துக் கொண்ட தினங்களையும்,பரிமாறப்பட பரிசுப் பொருட்களையும் குறித்து வைத்திருந்தேன்.  மழைகள் நின்றுபோன பின்மாலை ஒன்றில் திரும்ப படித்து காட்டலாமேனும் பேராசையில்.

ஆக்கிரமித்திருந்த காதல் மேகங்கள் கலையத் தொடங்கிய நாட்களில் கவிதைகள் நிரப்பியிருந்த நாட்குறிப்பின் பாகங்களினை நண்பர்களின் பிறந்த தினங்கள், முகவரிகள், தொலைபோசி இலக்கங்கள் நிரப்பின. இவற்றினை  குறித்துவைப்பதோடு நாட்குறிப்புகளுடனான தொடர்பு முடிந்து போனது.

அலைபேசி இரண்டம் இதயமாகி என்னுடன் பினைந்த பின்னர், நாட்குறிப்புக்கள் தேடுவாரற்று போனாது.மூலைவீட்டு எச்சுமி பாட்டியின் பிறந்த தினத்திலிருந்து கணடாவில் பிறக்கவிருக்கும் அக்கா மகனின் பிறந்த தினம் வரை சேமித்து வைக்க அருளிய முகமறியாத அலைபேசியை சிருஸ்டித்தவனை அடிக்கடி நமஸ்கரித்தேன்.

ஒரு முறை  எனது அகோர ஸ்பரிச தாக்குதல்களிலிருந்து தன்னைவிடுவிக்க-திடுமென- தனது முழு இயக்கத்தினையும் அலைபேசி நிறுத்தியது . அதனுடன் எச்சுமி பாட்டி பூவுலகில் வாழ்ந்ததற்கு இருந்த ஆதாரங்களும், இரு முறை அபி தந்த முத்தங்களின் சத்தங்களும் அழிந்து போனது.

பின்னர் அலைபேசியில் சேமிக்கும் அத்தனையும்,நாட்குறிப்பிலும் குறித்துவைக்க தவறுவதேயில்லை.

 

  •   றந்து போன நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தினை.. மீண்டும் தொடர இடமருளிய கூகுலாணந்தாவை வணங்கி, நாட்குறிப்புக்களை தொடரலாம் என நினைத்திருக்கிறேன்.  உதிர்ந்து போன பால்யங்களின் நிகழ்வுகளினை, நெகிழ்ச்சியான தருணங்களினை மீட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம்.

4 comments:

பாலா on June 13, 2009 at 3:02 AM said...

rasikkavaikkum nadai nanbare rasiththen

ஆபிரகாம் on June 13, 2009 at 9:58 AM said...

@பாலா நன்றி தல

geevanathy on July 3, 2009 at 1:37 PM said...

///பழைய புத்தக அலமாரி இடுக்குகளில் எதாவது தேடும் போது எதோச்சையாக கண்ணில்படும் அந்த கருநீல நாட்குறிப்பில். தொலைந்து போன பால்யம் கண்சிமிட்டி சிரிக்கும்.///

மிகவும் அருமையான பகிர்வு..
உண்மைதான் நண்பரே நாட்குறிப்பு நம் இன்னொரு நண்பன்.

சென்ஷி on July 31, 2009 at 7:28 PM said...

நல்லா எழுதியிருக்கீங்க ஆபிரகாம்!