Monday, June 8, 2009

நீட்சியான இரவுகள்.


2767623568_1aeeb63478 

வெம்மை அப்பிய உதடுகளின்
ஈரமுத்தங்கள்;
நினைவில் வரும் மழைநாட்களில்.
நீட்சியான இரவுகளும்
சூடான  கோப்பை தேநீரும் 
சில முத்தங்களும் கிடைத்துவிடுகின்றது

வனிப்பவரின்றி பெய்யும் மழை
சுருண்டுகிடக்கும் நாய்
சுவார்சியமின்றி விரியும் இரவு
தலையனை இளம்சூட்டில் 
வழியும் காதல் என
விட்டுபோன காதலினை 
ஆக்கிரமிக்கின்றன நினைவுகள்.

  

-ஆபிரகாம்

7 comments:

கடைக்குட்டி on June 8, 2009 at 10:06 AM said...

ஏன் இவ்வளவு சோகம் ???

நாலு வரின்னாலும் நச்சுன்னு சொல்லி இருகீக..

கடைக்குட்டி on June 8, 2009 at 10:06 AM said...

pls remove comment verification

கவிக்கிழவன் on June 8, 2009 at 10:08 AM said...

தலையனை இளம்சூட்டில்
முகம் புதைக்குமிரு கண்களில் வழியும் காதல்

கடைக்குட்டி on June 8, 2009 at 10:10 AM said...

நாந்தான் உங்களுக்கு மொத பின்னூட்டமா???

நான் ஆரம்பிச்சு வைத்த எந்தக் கடையும் நல்லா போனதா சரித்திரமே இல்ல...

நீங்களாவது தொடருங்க :-)

ஆபிரகாம் on June 8, 2009 at 10:15 AM said...

@கடைக்குட்டி.. நீங்கதான் முதல் பின்னூட்டம்! நன்றி!
@கவிக்கிழவன் நன்றி க.கி

கலையரசன் on June 8, 2009 at 6:56 PM said...

நல்ல கவிதை! தொடர்ந்து எழுதுங்கள், நாங்களிருக்கிறோம் ஆதரவு தர!

ஆபிரகாம் on June 8, 2009 at 7:54 PM said...

@கலையரசன் நன்றி நண்பா!