ICC World Twenty20
எதிர் பார்த்த பரபரப்பும்,அதிரடியும் நிறையவே மிஸ்ஸிங். பெரிய மைதானங்களும், வேகப்பந்து ஆடுகளங்களும்(சுழல்பந்து வீச்சாளர்களே பிரகாசிக்கிறார்கள்) பேட்டியின் விறுவிறுப்பினை குறைத்திருக்கினறன.ஆனாலும் மேசமில்லை. நடப்புச் சம்பியன் இந்தியாவும் நடையைகட்டிய பின்னர், எனக்கு பிடித்த இங்கிலாந்தும் பரிதாபமாக வெளியேறியது.
மீதமிருப்பது
- மேற்கிந்திய தீவுகள்- விஸ்வரூபம் எடுக்காவிட்டாலும் நன்றாகவே போராடுகிறார்கள்.Gayle-ஐ எதிர்பார்த்திருக்க Brovoவோ சகலதுறையிலும் அசத்துகிறார் .
- தென் ஆபிரிக்கா- பெரிதும் எதிர்பார்கும் அணி.சம்பியன் ஆவதற்கான திறமையும்,தகுதியும் இருந்தாலும் அதிஸ்டம்தான் கைகொடுப்பதில்லை.
- பாகிஸ்த்தான்- தட்டு தடுமாறி அரையிறுதி வாய்ப்பினை பெற்றிருக்கிறது. முக்கியமான போட்டிகளில் மூர்க்கமாக போராடுவது பாகிஸ்தானின் பலம்.
- இலங்கை-சங்கா நன்றாகவே செயற்படுகிறார், மத்திய வரிசையில் அதிரடி மிஸ்ஸிங். ஆரம்ப துடுப்பாட்டமே பலம்.
- நியூசிலாந்து-துடுப்பாட்டம்,பந்து வீச்சு என அத்தனையிலும் திறமையான வீரர்கள் இருந்தும் .ம்ஹும் சொல்லி கொள்ளும்படியான வெற்றிகள் எதுவுமேயில்லை-இன்றாவது சாதிப்பார்களா??
இன்று மாலை பரபரப்பான போட்டி-நியூசிலாந்திற்கு பழிக்கு பழி வாங்க ஒரு தருணம். -சங்கா தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு - காலநிலை சீராக அமைந்தால் -விறுவிறு விருந்து தயார்.
/////
பசங்க விகடனில் பசங்க இயக்குனரின் பேட்டி வாசித்தபோதோ,பட ஸ்டில்கள் பார்த்த போதோ அவ்வளாவாக கவரவில்லை.ஆனால் படம் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது. வண்டுகளின் நடிப்பு அபாரம்.அதிலும் பக்கடா-சூப்பர் பா.
////
ஆயிரத்தில் ஒருவன் -
பாடல்கள் வித்தியாசமாகவும்,சிறப்பாகவும் வந்திருக்கிறன.ஜி.வி-யிடம் நிறையவே வேலை வாங்கியிருக்கிறார் செல்வா.பாடல்களினை கேட்டும் போது யுவானாக இருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ,என இந்த குரங்குமனம் சிந்திக்கவே செய்கிறது.