Thursday, August 27, 2009

மழை நின்றுபோன இரவு

19 comments

 ருளின் மென்போர்வை தளர்த்தி 9_Rain_at_Night
அலையும் வன்மம்.
முகத்தினை  கொடூரமாக்கி
இறுதி வார்த்தைகளில் திட்டியது

அநாமதேயமாக பெய்யும் மழை 
விரல் பற்றி அழைத்துச் சென்றது
காதல் உலர்ந்த நாட்களிற்கு

தெருமுனையில் உறங்கும் குழந்தை
சன்னாமாய் ஒலி எழுப்பி
அயர்ந்து தூங்குகிறது
தாயின் நித்திரை சிதைத்து

வழிந்துபோகும் இடம் புரியாமல்
தேங்கியிருக்கிறது மழை நீர்
முறிந்த நம்காதலின் எச்சமாய்.

Thursday, July 16, 2009

ஒரு திரில் திருமணம்…

22 comments

muslim-wedding-hands

பின்சாமத்தில் ஒரு முறை ”திடுக்கிட்டு” கண் விழித்த போது, நோக்கியாவின் திரையினை பார்த்துச் சாய் சிரித்துக்கொண்டிருப்பதாக ஜோ சொன்னான். நொடிக்கு நொடிக்கு நோக்கியாவின் திரையினை பார்ப்பதும் குப்புற படுப்பதுமாக இருப்பதாகவும்.எப்போது தூங்குவான், எப்போது எழுந்திருக்கிறான் என்பது மில்லியன் டோலர் கேள்வியாக இருப்பதாகவும் சொன்னான். அலாரம் வைத்தவனாய் ஆறுமணிக்கெல்லாம் படுக்கை விரித்துவிடுவான், நித்திரை கொள்வதென்னமோ பின்சாமத்தில்தான்.

நோக்கியாவின் திரை உயிர்த்து அதன் ஒளி கீற்றுக்கள் மேற்சுவரில் தெறிக்கும் போது ’திடும்’ என எழுந்து புன்னகைத்தான். ”என்னடா மச்சி ?” என ஒரு முறை  ஜோ வினவிய போது  ”ஒரு குருவி சிக்கியிருக்கிடா” என்றான் ல்லோசன குறும் சிரிப்புடன்.சிக்கியிருக்கும் இந்த குருவி - காக்கா,கிளி போன்ற பறவைகள் என எண்னுபவர்கள், ஒரு நல்ல ஆ.கு வைத்தியரினை அனுகலாம். 

புதிதாக எங்கள் நட்புச் சதுரத்தினுள் நுளைந்த ஜோவிற்கு இது பிரமிப்பாக இருக்கலாம். சாயுடன் முன்று வருடங்களாக குடும்பம் நடத்தும் எங்களுக்கு (நான்,வினோ,சரா), காலையில் எழுந்து பல் தேய்க்காமல் கணனி முன்னால் அமர்ந்து-ஆப்பிள் யூஸ் குடித்தபடி-சட்டிங் செய்வது  போன்ற ஒரு சாதரண நிகழ்வு.

சாய்க்கும்-பொண்களிற்குமான தொடர்பு ( இதனை சாய் நட்பு என்பான்)  எவ்வளவு விரைவாக பற்றிகொள்கிறதோ, அவ்வளவு விரைவாக விட்டும் போகும். அதாவது அந்த குருவிக்கு புதிய கரும்குரங்கு(வார்த்தை உதவி வினோ) சிக்கும்வரை தொடரும்.

ஆனால் அதுவரை, கல்யானமாகி மூண்று மாதங்களோ ஆகும் ஐ.டி தம்பதியரின்(அமெரிக்கா டூ சென்னை) நெருக்கத்திலேயே இருவரும் பேசிக்கொள்வார்கள் என்பதனைவிட கொஞ்சி கொள்வார்கள் என்பதே சரியாகும்.

ஆரம்ப நாட்களில் மனைவியுடன் பேசுகிறான் என ஜோ நினைத்திருந்தான்.அவன் வந்த 3மாசங்களில் ஹாய் அனு, சொல்லுமா நித்து கோபமா ஜானு இல்லமா சுஜி என பெயர்கள் மாறியதில் ஜோவி்ற்கும் உண்மை புரிந்தது. 

இப்படி மாசம்,வாரம்,நாட்களாக கடலையும்போட்டு.. கன்றும் வளர்த்துவிட்ட சாய்க்கு நாளை திருமணம்.அந்த புண்ணியவதியை நினைதால்தான்…..

மணிகணக்காக அலை பேசியும்,சாட்டிலும் காதலித்த சாய்க்கு நிச்சயிக்கபட்ட திருமணம் அதவாது தாய், தந்தயர் பார்த்தவளை கரம்பிடிக்கிறான்.

“என்னடா மச்சி இப்படி பண்ணிடியே” என வினவினால்

“வாழ்கைல எப்பவுமே ஒரு திரில் இருக்கனும்டா'” எங்கிறான் ஆமா இதில என்னதான் திரில் இருக்கோ.

Wednesday, July 15, 2009

படித்ததில் பிடித்தது

7 comments

பரதேசிகளின் பாடல்கள் கவிதை தொகுதியில் இருந்து.

என் அக்காவும் உன் அம்மாவும் நீயும் நானும்

க்கா சாமத்தியப்பட்ட போது 1_raajasthaan_oviyam
அவள் விழாவொன்றினால்
புனிதமாக்கப்பட்டாள்.

அவள் இளைஞர்களுடன்
பேசுவதே அவரகளை உற்று
நோக்குவதோ 
ஒழுக்ககேடென்றானது 
புள்ளிமானென ஓடித்திரிந்த அவள்
சுருங்கிப் போனதாய் எனக்கொரு
ஞாபகம்.
அகத்திலிருந்து எழுந்த அழைப்புகளை
மறுத்து மறுத்துப் போராடிப் போராடி 
களைந்து அவள் கருகிப்போனது
எனக்கு தெரியும்
பின்னொரு நாள் குறிப்பும்
பொருந்தமும்
பார்த்து
அவள் ஒரு குசினியில் இருந்து
இன்னொரு
குசினிக்கு மாற்றம் பெற்றுச் சென்று
குழந்தைகளும் பெற்றாள்
அவ்வளவு தான் அவள் வாழ்க்கை
அவ்வளவே அவள் அனுபவங்கள்.

 
உன் அம்மாவும் அப்படித்தான்
தாய்லாந்தில் ஒருநள் அவளுக்கு
தாலிகட்டினேன்.

அன்புக்குரிய மகளே நான்
புலம்பெயர்ந்த அந்நிய பூமியில்
பிறந்தவளே
நேற்று நீ அழகான ஆபிரிக்க
இளைஞனுடன் கூடி நின்றாய்
பூங்காவில்
ஒரு அரபு இளைஞனுடன் அருகிருக்க
கண்டேன்.
பாடசாலை நண்பர்களுடன்
நாட்டிய சாலைகளுக்கு செல்கிறாய்
எல்லை கெட்ட நேரங்களில்
நீ மாலை வீடு வந்து சேர்கிறாய்

இப்போது நீ வாக்களிக்கும் உரிமை
பெற்றவள்
உன் வாழ்கையையும் தீர்மானிக்கும்
உரிமை உண்டென்கிறாய்

விடுதலை பற்றியும் விட்டகலல்
பற்றியும் விபரிக்கிறாய்
பாதை போட்டு பயனிக்கும் வீரியம்
தேடுகிறாய்.
போட்டிருக்கும் பாதைகளில்
பயனித்து பயனில்லை என்கிறாய்

நீ இங்கு வித்தியாசமானவல்ல
நீ இங்கு விசித்ஹ்திரமானவளல்ல

வாழ்வை முழுமையாக தரிசிக்கும்
உன் பேராவல் முற்றிலும் நியாயமானது
உன் அக அழைப்புக்களை நீ
அருவருபி்ன்றி ஏற்றுக்கொள்கிறாய்
அவற்றுடன் நீ போராடுவதுமில்லை
என் அக்க போன்று நீ அவற்றினை
அழுத்தி நசுக்கி விடுவதில்லை

அப்படியானால் எனக்கேன்
உன் மீது ஆத்திரம் வருகிறது
எல்லா நியாயங்களும் உன்
பக்கமிருந்தும் உன்னை நான்
ஏன் திட்டிக் கொண்டிருக்கிறேன்

என் சமூகம் சமைத்து
எனக்களித்த வார்த்தைகளால்  

************************

சாமத்தியப்படுதல் -  பூப்படைதல், குசினி- சமயல் அறை

புத்தக இடுக்குகளில் சொருகப்படும் அட்டை போலைருக்கும் குட்டியான  கவிதை தொகுதி. புலம்பெயர் தமிழர்களின் கவிதைகளை பரதேசிகளின் பாடல்கள் எனும் இந்த ச்சின்ன புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறது அப்பால் தமிழ். படைப்பளிகள் அழிந்த படைப்புக்களின் தொகுப்பு எனும் துனை தலைபோடு தொடுக்குக்கபட்டிருக்கும் இத்தொகுதியில் படைபாளின் பெயர் குறிப்பிடபடவில்லை.
இனையதளம்-அப்பால் தமிழ்

ஒளிப்பட உதவி - http://www.tamilmantram.com