Wednesday, July 15, 2009

படித்ததில் பிடித்தது


பரதேசிகளின் பாடல்கள் கவிதை தொகுதியில் இருந்து.

என் அக்காவும் உன் அம்மாவும் நீயும் நானும்

க்கா சாமத்தியப்பட்ட போது 1_raajasthaan_oviyam
அவள் விழாவொன்றினால்
புனிதமாக்கப்பட்டாள்.

அவள் இளைஞர்களுடன்
பேசுவதே அவரகளை உற்று
நோக்குவதோ 
ஒழுக்ககேடென்றானது 
புள்ளிமானென ஓடித்திரிந்த அவள்
சுருங்கிப் போனதாய் எனக்கொரு
ஞாபகம்.
அகத்திலிருந்து எழுந்த அழைப்புகளை
மறுத்து மறுத்துப் போராடிப் போராடி 
களைந்து அவள் கருகிப்போனது
எனக்கு தெரியும்
பின்னொரு நாள் குறிப்பும்
பொருந்தமும்
பார்த்து
அவள் ஒரு குசினியில் இருந்து
இன்னொரு
குசினிக்கு மாற்றம் பெற்றுச் சென்று
குழந்தைகளும் பெற்றாள்
அவ்வளவு தான் அவள் வாழ்க்கை
அவ்வளவே அவள் அனுபவங்கள்.

 
உன் அம்மாவும் அப்படித்தான்
தாய்லாந்தில் ஒருநள் அவளுக்கு
தாலிகட்டினேன்.

அன்புக்குரிய மகளே நான்
புலம்பெயர்ந்த அந்நிய பூமியில்
பிறந்தவளே
நேற்று நீ அழகான ஆபிரிக்க
இளைஞனுடன் கூடி நின்றாய்
பூங்காவில்
ஒரு அரபு இளைஞனுடன் அருகிருக்க
கண்டேன்.
பாடசாலை நண்பர்களுடன்
நாட்டிய சாலைகளுக்கு செல்கிறாய்
எல்லை கெட்ட நேரங்களில்
நீ மாலை வீடு வந்து சேர்கிறாய்

இப்போது நீ வாக்களிக்கும் உரிமை
பெற்றவள்
உன் வாழ்கையையும் தீர்மானிக்கும்
உரிமை உண்டென்கிறாய்

விடுதலை பற்றியும் விட்டகலல்
பற்றியும் விபரிக்கிறாய்
பாதை போட்டு பயனிக்கும் வீரியம்
தேடுகிறாய்.
போட்டிருக்கும் பாதைகளில்
பயனித்து பயனில்லை என்கிறாய்

நீ இங்கு வித்தியாசமானவல்ல
நீ இங்கு விசித்ஹ்திரமானவளல்ல

வாழ்வை முழுமையாக தரிசிக்கும்
உன் பேராவல் முற்றிலும் நியாயமானது
உன் அக அழைப்புக்களை நீ
அருவருபி்ன்றி ஏற்றுக்கொள்கிறாய்
அவற்றுடன் நீ போராடுவதுமில்லை
என் அக்க போன்று நீ அவற்றினை
அழுத்தி நசுக்கி விடுவதில்லை

அப்படியானால் எனக்கேன்
உன் மீது ஆத்திரம் வருகிறது
எல்லா நியாயங்களும் உன்
பக்கமிருந்தும் உன்னை நான்
ஏன் திட்டிக் கொண்டிருக்கிறேன்

என் சமூகம் சமைத்து
எனக்களித்த வார்த்தைகளால்  

************************

சாமத்தியப்படுதல் -  பூப்படைதல், குசினி- சமயல் அறை

புத்தக இடுக்குகளில் சொருகப்படும் அட்டை போலைருக்கும் குட்டியான  கவிதை தொகுதி. புலம்பெயர் தமிழர்களின் கவிதைகளை பரதேசிகளின் பாடல்கள் எனும் இந்த ச்சின்ன புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறது அப்பால் தமிழ். படைப்பளிகள் அழிந்த படைப்புக்களின் தொகுப்பு எனும் துனை தலைபோடு தொடுக்குக்கபட்டிருக்கும் இத்தொகுதியில் படைபாளின் பெயர் குறிப்பிடபடவில்லை.
இனையதளம்-அப்பால் தமிழ்

ஒளிப்பட உதவி - http://www.tamilmantram.com

7 comments:

சத்ரியன் on July 15, 2009 at 3:18 PM said...

//அப்படியானால் எனக்கேன்
உன் மீது ஆத்திரம் வருகிறது
எல்லா நியாயங்களும் உன்
பக்கமிருந்தும் உன்னை நான்
ஏன் திட்டிக் கொண்டிருக்கிறேன் //

பலரும் (தந்தையர்) தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

ஆபிரகாம் on July 16, 2009 at 2:02 AM said...

@சத்திரியன் நன்றி ஜி

S.A. நவாஸுதீன் on July 16, 2009 at 7:47 AM said...

ஒரு சாமானியனின் மனநிலை - ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க

ஆபிரகாம் on July 16, 2009 at 8:30 AM said...

@S.A. நவாஸுதீன்- என்னுடைய வேலை ஒன்லி டைப்பினதுதான்.. படைபாளியாரென தெரியவில்லைங்க நவாஸ்ஜி

பாலா on July 16, 2009 at 5:46 PM said...

இணையத்தில் மட்டுமே படிக்க இயலுமா இல்லை
புத்தகமாய் வாங்க முடியுமா?

" உழவன் " " Uzhavan " on July 29, 2009 at 10:11 AM said...

//புள்ளிமானென ஓடித்திரிந்த அவள்
சுருங்கிப் போனதாய் எனக்கொரு
ஞாபகம்.//

நல்ல வரிகள்

OURTECHNICIANS HOME BASE SERVICES on March 31, 2016 at 9:52 AM said...

ourtechnicians deals with home appliance repair and services are electrical services,plumbing services, two wheeler repair, ATS system repair ervices, house renovation,paintings, washer repair services, bathroom and kitchen remodelling and maintenance services.If you need our service inspect on
home appliance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/